மத்திய பிரதேசம் மாநிலம் மன்சூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மானங்காத்தான் கிராமத்தை சேர்ந்த விவசாயி அசோக்குமாரின் மகள் பொன்னிலா. இவர் வித்யாபாரதி தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்ற நிலையில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.