காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையிலுள்ள பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்தவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனிஷா ஏஜென்சீஸ் என்ற பெயரில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் பாஸ்கரன் என்பவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி சென்ற சிறிது நேரத்தில் வாகனம் நடுவழியில் பழுதாகி நின்றது. அருகில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் வாகனத்தை விட்டபோது, தண்ணீர் கலந்த பெட்ரோலே அதற்கு காரணம் என தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் பெட்ரோலுடன் சென்று பங்க் ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. அப்போது மேலம் சில வாடிக்கையாளர்கள் அதே குற்றச்சாட்டுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.