கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பள்ளியில் கழிவறை கட்ட விடாமல் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தடுப்பதாக ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அரசம்பட்டில் உள்ள பள்ளியில் கழிவறை இல்லை என்பதால் தாட்கோ மூலம் நிதி ஒதுக்கப்பட்டு சண்முகம் என்பவர் ஒப்பந்தம் பணிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி என்பவரின் கணவர் கருணாநிதி, பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : கர்ப்பிணிக்கு வாங்கிய இட்லி சாம்பாரில் கிடந்த பல்லி... தனியார் உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல்