மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கட்டக்குளத்தில் உள்ள அரசு தற்காலிக நேரடி கொள்முதல் நிலையத்தில் மூட்டை ஒன்றுக்கு 60 ரூபாய் கொடுத்தும், அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 25 நாட்களாக கொள்முதல் செய்யாமல் டன் கணக்கில் தேங்கி கிடக்கும் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைவதாகவும், உலர்த்துவதற்கு போதிய இட வசதி இல்லாமல், கூலிக்கு ஆட்களை வைத்து உலர்த்துவதால், அதிக செலவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.சோழவந்தான் அருகே முதல் போக பாசனத்தில், தற்போது 800 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், விவசாயம் செய்வதே பெரிய சவாலாக உள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யாமல் இருப்பது, விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பீடு ஏற்படுத்துவதாக, விவசாயிகள் குமுறுகின்றனர். தேங்கி கிடக்கும் நெல்மணிகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். இதையும் பாருங்கள்... இதிலும் லஞ்சமா? - விவசாயிகள் குமுறல் | MaduraiFarmer | Madurai | TamilNaduFarmers