கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவரை பணி செய்ய விடாமல் அராஜகத்தில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளரான கருணாபுரத்தை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான், தனது மகளுக்கு காதின் பின்புறம் உள்ள சிறிய கட்டிக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அங்கு, பரிசோதனை செய்துகொண்டிருந்த பெண் மருத்துவரிடம் சத்தம்போட்டு பேசியவர், தகவலறிந்து வந்த மருத்துவர் கணேஷ் ராஜாவிடமும் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க வலியுறுத்தி, இருவரும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.