கிருஷ்ணகிரி அருகே பக்கவாட்டு தடுப்புகள் இல்லாத லாரிகளில் கிரானைட் கழிவு கற்கள் ஏற்றி செல்லப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். போச்சம்பள்ளி, வேலம்பட்டி, அச்சமங்கலம், தொகரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கிரானைட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்குள்ள கழிவு கற்களை வாங்கும் சிலர் பக்கவாட்டு தடுப்புகள் இல்லாத லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இதனால் சாலை வளைவுகளில் திரும்பும்போது பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்படுவதாக கூறும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..