சிவகங்கையில் தனியார் மினி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர், மினி பேருந்துக்கும், பள்ளி பேருந்துக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், பள்ளிப் பேருந்தை முந்தி செல்வதற்காக மினி பேருந்து குறுகிய இடைவெளியில் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.சிவகங்கையில் இருந்து சூரக்குடிக்கு சென்ற தனியார் மினி பேருந்தில் ஏனாபுரம் கிராமத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் சந்தோஷ் மற்றும் சூர்யா ஆகியோர் போட்டிப் போட்டுக் கொண்டு படிக்கட்டில் பயணித்ததாக கூறப்படுகிறது. ஆதம்பள்ளி வாசல் அருகே வந்தபோது, முன்னால் சென்ற பள்ளி பேருந்தை மினி பேருந்து முந்த முயற்சித்தபோது இருவரும் இடையில் நசுங்கி, சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.