கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர் திசை சாலையில் பாய்ந்து லாரி மீது மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த பாலன் என்பவர் தனது நண்பர்களுடன் கேரள மாநிலம் மூணாறு சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க, திடீர் பிரேக் பிடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. லாரி மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், விபத்து காரணமாக சென்னை திருச்சி நான்கு வழிசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.