சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அண்ணனுடன் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமந்தப்பட்டியைச் சேர்ந்த திவ்யா என்பவர், அருகேயுள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் இரவு தனது பெரியம்மா மகன் ரஞ்சித் என்பவருடன் வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த முள் கம்பி வேலியில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் அமர்ந்திருந்த திவ்யா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.