சபரிமலை சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, தேநீர் அருந்துவதற்காக சாலையை கடக்க முயன்ற பக்தர்கள் மீது, சரக்கு வாகனம் மோதியதில், இருவர் உயிரிழந்தனர். சிறுவர்கள் உட்பட்ட 36 பேர் கொண்ட குழுவினர் சபரிமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மின்னூர், சிட்கோ பகுதியில் சாலையோரம் பேருந்தை நிறுத்திய பக்தர்கள், தேனீர் குடிப்பதற்காக சாலையைக் கடந்த போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில், கங்காதரன், சூர்யா ஆகியோர் பலியாகினார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சரக்கு வாகன ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இதையும் பாருங்கள் - திருப்பூரில் பயங்கர பதற்றம், குவிந்த போலீஸ் | Tiruppur | Tiruppur Breaking News