காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலையின் தடுப்பு சுவர் மீது அரசு பேருந்து மோதியதில் 8 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பூவிருந்தவில்லியை நோக்கி சென்ற அரசு பேருந்து பொன்னேரி கரை ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது இதனால், சாலையின் தடுப்பு சுவரை கடந்து எதிர்புறம் வந்த இன்னோவா கார் மீது மோதிய பேருந்து, பின்பு பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது. செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டுநர் இயக்கியதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.