திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நத்தம்புதூர் பிரிவு சாலையில் பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த தனியார் நிறுவன வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், காயமடைந்த 20 பெண் தொழிலாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.