பண்ருட்டி அருகே உயிரிழந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது ஃப்ரீசர் பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கியதால் 12 பேர் காயமடைந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், உறவினர்கள் க உயிரிழந்த லோகநாதன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.அப்போது எதிர்பாராத விதமாக ப்ரிசர் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் அருகில் இருந்தவர்கள் உயிரிழந்த லோகநாதன் மனைவி உட்பட 12 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.