மதுரையில் தீபாவளி திருநாளன்று வாகன விபத்தில் சிக்கிய 40க்கும் மேற்பட்டோர், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் மதுபோதை காரணமாகவும், பைக்குகளில் ரீல்ஸ் மோகத்தாலும் விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர்.