திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கியவரின் கால் துண்டான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆந்திரா மாநிலத்திலிருந்து வாழை தார்களை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் வழியாக சென்ற லாரி சாலையோரம் நின்ற கார் மீது கவிழ்ந்தது. அதே சாலையில் நடந்து சென்ற ஹோட்டல் சூப்பர்வைசர் சாமுவேல் என்பவர் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டதால் அவரது கால் துண்டானது.