ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரேஷன்கடை ஊழியர் உயிரிழந்தார். சின்ன பரவத்தூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்த பழைய சீமை ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அவர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.