திருவாரூரில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், அவரது சேலை சக்கரத்தில் சிக்கி நிலை தடுமாறி சாலையில் உருண்டு விழுந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மணக்கால் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி கீதாவை பணிக்கு அழைத்துச் சென்றபோது, வடகண்டன் பாலம் அருகே கீதாவின் சேலை இருசக்கர வாகனத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது. விபத்தில், முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.