தருமபுரி அருகே டிப்பர் லாரி மீது வேகமாக சென்ற பைக் மோதிய விபத்தில் 12-ம் வகுப்பு மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நல்லம்பள்ளி அடுத்த நாகாளம்மன் கோம்பை பகுதியை சேர்ந்த 19 வயது கார்த்திக் மற்றும் மகேந்திரன் என்பவருடைய 17 வயது மகன் பெட்டி என்ற வெற்றி இருவரும் பைக்கில் தருமபுரி நோக்கி சென்றனர். முத்தம்பட்டி பகுதியில் சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதையும் படியுங்கள் : ஜூனியர் உலக கோப்பை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்... ஜூனியர் உலக கோப்பைக்கான இலட்சிணை வெளியீடு