இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதனால், தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியில் இருந்து 5.43 கோடியாக சரிந்துள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் தான் 35.58 சதவீத வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.