சென்னையை அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் சுமார் 300 போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட கஞ்சா, மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் சுமார் 300 போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் கஞ்சா, குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.