சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரியில், சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கரை உள்வாங்கி சேதம் அடைந்திருப்பதாக புகார் கூறப்படுகிறது. 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்பாய் கொண்டு ஏரிக்கரை மூடப்பட்டுள்ள நிலையில், 40 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஏரிக்கரை பலப்படுத்தும் பணிகள் தரமற்ற முறையில் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.