தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, உத்தமபாளையம் கல்லுமேட்டுப்பட்டியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், வயலில் சாய்ந்து, முற்றிலும் சேதமடைந்துள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும், 40 மூட்டை நெல்லுக்கு பதில் 20 மூட்டை நெல்லே கிடைப்பதால் மிகுந்த நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். சுமார் 100 ஏக்கர் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இன்று அறுவடை செய்து விடலாம் என்று நினைத்திருந்த வேளையில், நேற்று இரவு பெய்த கன மழையினால், நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து, படுத்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.