சென்னை எழும்பூரில் உரிமம் இன்றி இயங்கி வந்த ஸ்பாவுக்கு சோதனை செய்ய வந்த போலீசாரிடம் இருந்து ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற பெண்ணுக்கு, இடுப்பு எலும்பு முறிந்த சம்பவம் அரங்கேறியது.ஸ்பாவுக்குள் கருக்கலைப்பு மாத்திரைகளும் சிக்கியிருக்கும் நிலையில், ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.