தேனி போடிநாயக்கனூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஆட்டோ ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். போடிநாயக்கனூர் அருகே குலாலர்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டி, மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.