ஈரோடு மாவட்டம், பவானி அருகே பாலத்துக்கு அடியில் தாயுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை, தம்பதி கடத்தி சென்ற நிலையில், போலீசார் 25 நாட்கள் கழித்து மீட்டனர். லட்சுமி நகர் கோண வாய்க்கால் மேம்பாலத்தின் அடியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துடைப்பம் செய்யும் தொழிலை செய்து வந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி வெங்கடேஷ், கீர்த்தனா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனையடுத்து, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் குழந்தையை போலீசார் தேடி வந்த நிலையில், குழந்தையில்லாத ரமேஷ் - நித்யா தம்பதி குழந்தையை திருடியது தெரிய வந்தது. ஏற்கனவே அவர்கள் சேலத்தில் குழந்தையை திருடி மாட்டிக்கொண்டதும் தெரிய வந்தது.