சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் உலக நன்மை வேண்டி ஆரத்தி வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. சமுத்திர ஆரத்தி குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் சந்திரனுக்கும் சமுத்திரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள் போன்ற பல்வேறு விதமான வாசனை திரவியங்களால் சமுத்திரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதில், உள்ளூர் பக்தர்கள், வடமாநில சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : சந்திர கிரகணத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் நடை அடைப்பு தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் சுவாமி