சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71 ஆவது பிறந்தநாளை ஒட்டி, EPS கோப்பை MR. INDIA ஆணழகன் போட்டி நடைபெற்றது. ஸ்ரீதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், சிறப்பு விருந்தினர்களாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.