சென்னை குரோம்பேட்டை திருநீர்மலை சந்திப்பில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்று ஆட்டோ மீது மோதிய இளைஞர் காவலர்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநரை அடிக்க பாய்ந்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டினார். தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் பல்லாவரம் நோக்கி சென்றபோது ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநரை 3 பேரும் தாக்கியதோடு செல்போனை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்தனர்.அப்போது போக்குவரத்து போலீசார் வருவதை கண்ட இருவர் தப்பியோட ஒருவரை மடக்கி பிடித்தனர்.