திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு 6-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை வீட்டிற்கு தனியாக அழைத்துச் சென்று பாலியியல் சீண்டலில் ஈடுபட்ட 30 வயது இளைஞர் மீது மாணவியின் தாய் புகார் அளித்தார். தொடர்ந்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2 ஆண்டுகள் கழித்து தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விமல் என்பவனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.