சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர், சாலை தடுப்பில் மோதி உயிரிழந்ததன் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அடையாறு பகுதியை சேர்ந்த வசந்த் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றிய நிலையில், தீபாவளி பண்டிகையன்று தனது விலை உயர்ந்த பைக்கில் நண்பர்களுடன் சேர்ந்து பைக் ரேஸில் ஈடுபட்டார்.