கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூர் ரயில்வே மேம்பாலத்தில் பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். கார் ஓட்டுநர் தப்பியோட, காரில் இருந்த மற்ற இருவரை பிடித்து ஊர் பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள், ஆத்திரத்தில் அந்த இருவரையும் தாக்க முயன்றதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.