தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அரசு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்ததால், பேருந்து ஓட்டுநரை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோபாலபுரத்தை சேர்ந்த பிரதீப் என்பவர், பாபநாசத்தில் இருந்து தனது பைக்கில் வீட்டிற்கு புறப்பட்ட போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.