திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சிவன் கோயில் மீது ஏறி, ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரவில் திடீரென கோவில் மீது ஏறிய இளைஞரை, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கீழே இறங்குமாறு பலமுறை கூறியும் இறங்காததால் திருவள்ளூர் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து எச்சரித்தும் கோவிலை விட்டு இறங்காத இளைஞர், சீரியல் லைட் ஒயரை கழுத்தில் சுற்றி தற்கொலை செய்து கொள்வது போல் பாவனை செய்தார். இதையடுத்து கோவில் மீதேறிய நபர், வடமாநில இளைஞரை கீழே இறக்கினார். தப்பியோட முயன்றவரை போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.