விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பித்தளை வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அவர் மீது இருபிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அருப்புக்கோட்டையில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜகுரு என்பவர், கடந்த 5ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியபோது பித்தளை வாளால் கேக் வெட்டினார்.