கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சமேடு கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு மின் விளக்கு பொருத்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தர்மபுரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மிதுன் என்பவர் மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்தார்.