சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமத்தில் சாலை ஓரம் கிடந்த சூட்கேசில் இருந்து அழுகிய நிலையில் இளம் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த சங்ககிரி போலீசார் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சூட்கேஸை வீசியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.