திருப்பத்தூரில் ஆட்டோவில் ஏறிய இளம் பெண்ணை கடத்தி சென்று செல்போனை பறித்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் இஸ்மாயில் பேட்டை பகுதியை சேர்ந்த நகினா, இரவு அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல ஜின்னா ரோடு பகுதியில் வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.அப்போது, குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர், நகினா கூறிய வழியை தவிர்த்து, வேறு வழியாக சென்று அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.