மயிலாடுதுறை மாவட்டத்தில், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்த இளைஞரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீர்காழியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அசோக் இளவரசன் என்பவர் ஏ.எஸ்.ஏஜென்ஸி என்ற வாட்டர் சப்ளை கம்பெனி வைத்து நடத்தி வந்தார். மேலும் ட்ரேட் மார்க்கெட்டிங்கும் செய்து வந்தார். இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக மன அழுத்ததில் இருந்த அவர், உப்பனாறு ரயில்வே பிரிட்ஜ் அருகே ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை கொண்டார்.