திருவள்ளுர் அடுத்த கடம்பத்தூர் பகுதியில் இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் மற்றும் 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடம்பத்தூர் மேல்பகுதி இளைஞர்களுக்கும் ,கீழ்பகுதி இளைஞர்களுக்கும் இடையே யார் கெத்து என்ற போட்டி இருந்ததாகவும், இதில் தாங்கள்தான் கெத்து என நிரூபிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் இளைஞரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதில் தப்ப முயன்ற மூன்று பேருக்கு மாவு கட்டு போட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதையும் படியுங்கள் : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் மண் அரிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய சாலை