நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர், மதுபோதை தலைக்கேறிய நிலையில், 4 மணி நேரத்துக்கும் மேலாக அட்ராசிட்டியில் ஈடுபட்டார். தகாத வார்த்தைகளில் பேசியபடி வாகனங்களை நிறுத்துவது, சாலையின் நடுவே படுத்து உறங்குவது, வாகனங்கள் மீது தடுமாறி விழுவது என அடாவடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர், தட்டிக்கேட்பவர்களையும் வசைபாடினார். தகவலறிந்து வந்த உறவினர்கள், போதையில் இருந்த இளைஞரை குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.