கரூரில் கணவனை பிரிந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டுக்கு தெரியாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். தாந்தோணிமலை பகுதியை சேர்ந்த கதிரேசன் என்ற இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார்.