திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு அடுத்த புங்கம்பட்டு நாடு, கோவிலூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ் (25) உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மளிகை பொருட்கள் வாங்க பேலூரில் இருந்து கிலானூர் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது மேட்டில் இருந்து பள்ளத்தில் இறங்குவதற்காக 11 KV வாட் மின்சாரம் செல்ல கூடிய இரும்பு கம்பத்தை தாங்கிப் பிடித்து இறங்கியுள்ளார். அப்போது இரும்பு மின்சார கம்பத்தில் மின்சார வயர் பீங்கான் உடைந்து இரும்பு கம்பத்தில் நேரடியாக மின்சாரம் பாய்ந்து இருந்துள்ளது. அதனால் அங்கேயே தீயில் கருகி உள்ளார். இதனை அறிந்த உடன் வந்த நபர்கள் கம்பெடுத்து கையில் அடித்து வாலிபரை காப்பாற்றி உள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் கோவிலூர் மக்கள் அங்கு இருக்கக்கூடிய மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏற்கனவே இதனை சீர் செய்யக் கூறி இருந்தோம் இதனை சீர் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்று கூறி தற்போது தர்ண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரத்துறையின் அலட்சியப் போக்கால் வாலிபர் தீயில் கருகே சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : ஒன்றாக திறக்கப்பட்ட பழைய மற்றும் புதிய பாலங்கள்