சேலத்தில் நண்பரின் வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர், கை விரலில் பாம்பு தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். நிலவாரப்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ராஜமுருகன், தனது நண்பரின் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தலையில் கட்டையை வைத்து அழுத்தி பிடிக்க முயன்ற போது, கை விரலில் பாம்பு தீண்டியது. ஆனாலும் அலட்சியமாக செயல்பட்டவர், விரலில் துணியை கட்டிக்கொண்டு மீண்டும் பாம்பை பிடிக்க முற்பட்டார். வலி அதிகமானதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் உடல் முழுவதும் விஷம் பரவியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைஞரை பாம்பு தீண்டிய வீடியோ வெளியாகியுள்ளது