சென்னை அடுத்த தாம்பரம் முடிச்சூர் சாலையில் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி சென்றதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர், காரில் சென்ற குடும்பத்தினரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதோடு கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இருசக்கர வாகனத்தின் பின்னால் தனது தாயை அமர வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்ற இளைஞரை அவ்வழியே காரில் வந்த குடும்பத்தினர் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், காரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினார். அதனை செல்ஃபோனில் வீடியோ பதிவு செய்ததால் கோபமடைந்த இளைஞர் கார் கண்ணாடியை உடைக்க, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.