திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அதிவேகமாக காரை ஓட்டி வந்தரை தட்டிக்கேட்ட இளைஞரை, அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை கைது செய்ய கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலாளவந்சேரியை சேர்ந்த அபினேஷ் என்பவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சாலையில் நின்றிருந்த போது, மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் அதிவேகமாக கார் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, காரை தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்ட அபினேஷிற்கும், அஜித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், அபினேஷை, அஜித்குமார் உள்ளிட்ட இருவர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது.