திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் நீர்த்தேக்க ஓடையில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமான இளைஞரை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது. சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் ஏலகிரி மலை சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று பகல் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க ஓடையில் குளித்தபோது, நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து ட்ரோன் மற்றும் நீர்நிலைகளின் ஆழ்பகுதிக்கு சென்று தேடக்கூடிய நபரின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.