திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடியில் நீதிமன்ற ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லையில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பாண்டுகுடியைச் சேர்ந்த காதலர்களான முகமது ஆதம், சௌமியாவுக்கு இடையேயான பிரச்சனை குறித்து கேட்க, தனது நண்பர்களை அழைத்து கொண்டு முகமது ஆதம் சௌமியா வீட்டிற்கு சென்றபோது, அவரது சகோதரருக்கும் ஆதம் தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சண்டையை சமாதானம் செய்ய முயன்ற சந்தோஷ்குமார் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் .