விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கீழ்புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இந்திரன் என்பவர், சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்ற சிறுமியை வழிமறித்த இளைஞர், பாலியல் தொல்லை அளித்ததோடு, சிறுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்திரன் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.