கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உளுந்து, பச்சை பயிர்களை மஞ்சள் நிற பூச்சி தாக்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உளுந்து, பச்சை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் பயிர்களை மஞ்சள் நிற பூச்சி தாக்குவதாகவும், இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ள நிலையில் பூச்சி தாக்கத்தால் கடும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாவும் கூறினார்.