திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நூல் வியாபாரி மற்றும் அவரது மனைவியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பனிக்கம்பட்டியில் வசித்து வரும் சிவகுமார் நூல் வியாபாரம் செய்து வந்த நிலையில், சிவக்குமாரும், அவரது மனைவி ராஜலட்சுமியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.